தனுஷ்-செல்வராகவன் வெற்றி கூட்டணி மீண்டும் இணைவது எப்போது?

  • IndiaGlitz, [Monday,October 31 2016]

தனுஷ் நடித்து கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'கொடி' ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனம் மற்றும் ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தனுஷ் தற்போது கவுத மேனனின் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா', மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், நதியா உள்பட பலர் நடித்து வரும் 'பவர்பாண்டி', என்ற படத்தையும் இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி 'செளந்தர்யா ரஜினி' இயக்கவுள்ள இரண்டாவது படத்திலும் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு மீண்டும் தனது சகோதரரும், முன்னணி இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கமென்ன' போன்ற சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

'திருட்டுப்பயலே 2' படத்தில் நாயகியாக பிரபல நடிகை

சுசிகணேசன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜீவன், அப்பாஸ், மாளவிகா நடிப்பில் 'திருட்டுப்பயலே' திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது...

மீண்டும் நயன்தாரா படத்தில் விஜய்சேதுபதி?

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இதே வெற்றி ஜோடி...

சென்னை விமான நிலையத்தில் முகமூடியுடன் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்து...

'கொடி', 'காஷ்மோரா' சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

கடந்த தீபாவளியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கார்த்தியின் 'காஷ்மோரா' மற்றும் தனுஷின் 'கொடி' ...

பிரதமர் மோடியுடன் நடிகை கவுதமி திடீர் சந்திப்பு

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் துணைவியுமான கவுதமி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி புற்று நோய் விழிப்புணர்வுக்காக பல அரிய சேவைகள் செய்து வருகிறார்.