close
Choose your channels

தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

Friday, March 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கும்கி இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் 'ரெயில்' என்று அதிகாரபூர்வமற்ற முறையில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.


ஏற்கனவே தனுஷின் 'கொடி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment