தனுஷ் இயக்கும் 3வது படத்தின் டைட்டில்.. பழைய பாடலின் கவிதை வரிகள்..!

  • IndiaGlitz, [Sunday,December 24 2023]

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. அந்த வகையில் சற்றுமுன் வெளியான மோஷன் போஸ்டர் வீடியோவில் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘போலீஸ்காரன் மகள்’ என்ற பழைய திரைப்படத்தில் இடம்பெற்ற ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற பாடலின் கவிதை வரிகள் தான் இந்த படத்தின் டைட்டில் ஆக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டில் குறித்த வீடியோவில் தனுஷின் குரலில் ’காதல் என்றால் என்ன? வர்றது போறது எல்லாம் காதலா? வர்றதும், போறதும் தான் என கூறப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டுன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஜி வி பிரகாஷ் இசையில், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில் ஜிகே பிரசன்னா படத்தொகுப்பில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை கஸ்தூரிராஜா மற்றும் விஜயலஷ்மி கஸ்தூரிராஜா தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வித்தியாசமாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.