தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த சரத்குமார்.. வீட்டிற்கே சென்று வாழ்த்து பெற்ற புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

தனுஷின் 50வது திரைப்படமான ’D50’ திரைப்படத்தை அவரே இயக்கினார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இரண்டாவது படத்தை இயக்கி முடித்த தனுஷ், உடனே அடுத்த படத்தையும் இயக்க தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது. தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தில் அவருடைய உறவினர் வருண் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தனுஷ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சரத்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தனுஷ், சரத்குமார் இல்லத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் சரத்குமாரின் குடும்பத்தினர்களாகிய ராதிகா, வரலட்சுமி உள்ளிட்டவர்களுடன் அவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷின் அடுத்த படத்தில் சரத்குமார் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.