'அசுரன்' தேசிய விருது: நன்றி தெரிவித்து தனுஷ் எழுதிய கடிதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறிவந்தனர். இந்த நிலையில் தனக்கு தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்த வெற்றிமாறன் மற்றும் ’அசுரன்’ படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தனுஷ் நீண்ட கடிதம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேற்று ’அசுரன்’ படத்திற்காக தேசிய விருது கிடைத்த தகவல் அறிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விருது கிடைக்க அனைவரின் ஆசீர்வாதங்கள் தான் காரணம். நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது எனது தாய், தந்தையார் மற்றும் எனது குருவான சகோதரர் ஆகியோர்களுக்கு தான். அதன் பிறகு நான் நன்றி சொல்ல வேண்டியது வெற்றிமாறன் அவர்களுக்கு. அவர் எனக்கு சிவசாமி என்ற கேரக்டரை தந்ததால் தான் இந்த விருது எனக்கு கிடைத்தது. நான் முதன்முதலில் பாலுமகேந்திரா அலுவலத்தில் வெற்றிமாறனை பார்த்தேன். அதன் பின்னர் அவர் எனக்கு ஒரு அண்ணனாகவும் சிறந்த நண்பராகவும் விளங்கி வருகிறார். அவர் இயக்கிய நான்கு படங்களில் நடித்தது மற்றும் அவருடன் இரண்டு திரைப்படங்களை தயாரித்து ஆகியவை எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
அதேபோல் தேசிய விருதை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கும் எனது நன்றி. அதுமட்டுமின்றி ’அசுரன்’ படக்குழுவினர் அனைவருக்கும் குறிப்பாக பேச்சியம்மாள் கேரக்டரில் நடித்த மஞ்சு, சிதம்பரம் கேரக்டரில் நடித்த கென் மற்றும் முருகன் தீஜே ஆகியோர்களுக்கும் நன்றி.
‘வா அசுரா’ போன்ற சிறப்பான பாடல்களை பதிவு செய்த ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுக்கும் நன்றி. மேலும் ஊடகங்கள் தொலைக்காட்சிகள் சமூக வலைதள பயனாளிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக எனக்கு அனைத்து வகையிலும் மிகுந்த ஒத்துழைப்புடன் இருந்துவரும் எனது ரசிகர்களுக்கு எனது அளவில்லா அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தனுஷ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
OM NAMASHIVAAYA ?????? pic.twitter.com/XXFo8BDRIO
— Dhanush (@dhanushkraja) March 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com