தனுஷின் 'தங்கமகன்' படத்திற்கு டபுள் சென்சுரி அந்தஸ்து

  • IndiaGlitz, [Thursday,December 17 2015]

இந்தியாவிலேயே அதிக திரைப்படங்கள் ரிலீஸ் செய்யும் கோலிவுட் திரையுலகில் வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளியாகின்றது. 52 வாரங்களில் 200 படங்கள் என்றால் சராசரியாக வாரம் ஒன்றுக்கு 4 படங்கள் வெளியாகின்றது.


கடந்த 2014ஆம் ஆண்டு 209 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில் இதுவரை 199 படங்கள் வெளியாகியுள்ளது. நாளை வெளியாகவுள்ள தனுஷின் 'தங்கமகன்' இவ்வருடத்தில் வெளியாகும் 200வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை வாரம் என்பதால் குறைந்தது ஆறு படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. மேலும் டிசம்பர் 31-ல் வெளியாகும் படங்களை சேர்த்தால் கண்டிப்பாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 400 படங்களுக்கும் மேல் வெளியாகியபோதிலும் ஒருசில குறிப்பிட்ட படங்களே சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகமான படங்கள் வெளியிடும் கோலிவுட் திரையுலகம் அந்த படங்களை வெற்றிப்படங்களாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாக உள்ளது.

More News

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் இணையும் தனுஷ்-சமந்தா-அனிருத்

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், கிட்டத்தட்ட தனுஷின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்...

கூகுள் தேடலில் சாதனை புரிந்தது 'பாகுபலி'

2015ஆம் ஆண்டில் கூகுளில் அதிக நபர்களால் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது

எந்திரன் 2' வில்லன் அறிவிப்பு. அதிகாரபூர்வமாக வெளியான பத்திரிகை குறிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ள 'எந்திரன் 2'...

சூர்யா-விஷால்-ஜெயம் ரவியுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்

வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் சூர்யாவின் 'பசங்க 2', வெற்றிமாறனின் 'வில அம்பு', விமல் நடித்த 'அஞ்சல'...

'பசங்க 2' ரிலீஸ்: ரசிகர்களுக்கு சூர்யாவின் அன்பு வேண்டுகோள்

சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கோலிவுட் திரையுலகினர் பெரும் உதவி செய்து வந்தனர் ...