சூர்யாவை அடுத்து தனுஷின் நன்றி செய்தி

  • IndiaGlitz, [Thursday,December 31 2015]

சூர்யா தயாரித்த இரண்டு படங்களின் வெற்றிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்த செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் சூர்யாவை அடுத்து தனுஷ் கடந்த 2015ஆம் ஆண்டு தனக்கு சிறப்பாக அமைந்திட ஒத்துழைப்பு தந்த ரசிகர்கள், இயக்குனர்கள், ஊடகங்கள் மற்றும் பெற்றோர், கடவுள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இவ்வருடம் வெளியான தன்னுடைய படங்களை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள தனுஷ் இவ்வருடம் தன்னை இயக்கிய இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், பாலாஜி மோகன், வேல்ராஜ், பால்கி ஆகியோர்களுக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் தனது படங்களை நல்ல முறையில் விமர்சனம் செய்து தனக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் அளித்த மீடியா மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.

2015ஆம் வருடம் மக்களுக்கு நல்ல அனுபவங்களையும், கெட்ட அனுபவங்கள் மூலம் ஒருசில பாடங்களையும் நமக்கு கற்று கொடுத்துள்ளதாக கூறிய தனுஷ், கடைசியாக தன்னுடைய பெற்றோர்களுக்கும் கடவுளுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

More News

மாதவனின் 'இறுதிச்சுற்று' சென்சார் விபரங்கள்

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

லிங்குசாமிக்கு 2வது முறையாக கைகொடுத்த பென் மூவீஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி தயாரித்திருந்தார்...

2015-ல் சின்ன பட்ஜெட்டில் வெளியான சிறப்பான திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும், அந்த பிரமாண்டத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற...

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும்....

36 வயதினிலே, பசங்க-2 வெற்றிக்கு நன்றி தெரிவித்த சூர்யா

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இதுவரை '36 வயதினிலே' மற்றும் 'பசங்க-2' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது...