'முக்கா துட்டு கப்பகிழங்கே, அக்கா பெத்த அச்சு முறுக்கே': 'திருச்சிற்றம்பலம்' சிங்கிள் பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘தாய்க்கிழவி’ என்ற பாடல் ரிலீஸ் ஆகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அனிருத்தின் அட்டகாசமான இசையில் தனுஷ் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோவை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தனுஷ், ராஷிகண்ணா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, அறந்தாங்கி நிஷா, முனிஷ்காந்த் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
இன்று வெளியாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் தாய்க்கிழவி பாடலின் முதல் சில வரிகள் இதோ:
என் முக்கா துட்டு கப்பகிழங்கே
அக்கா பெத்த அச்சு முறுக்கே
அவ அன்புல தாயி
புத்தியில கிழவி
மொத்தத்தில அவதான் தாய்க்கிழவி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com