வாழ்க்கையில் பிரபலமாக 2 வழிகள் இருக்கு: காலா ஆடியோ விழாவில் தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் பேசியதாவது:
தலைவரை புகழ்ந்தால் பிடிக்காது. அதனால அவரிடம் கற்றுக்கொண்ட ஒருசில விஷயங்களைப் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். காலா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு 11.30 மணிக்கு முடிய வேண்டியது. அனால் ஷூட்டிங் 2.30 மணி வரை நீண்டது. அப்போதும் முதல் படத்தில் பண்புரிவது போல அவர் காட்டிய தொழில் பக்தியை, அப்போது கற்றுக்கொண்டேன். இந்தக் கதையை ரஞ்சித் அவரிடம் சொல்லும்போது தயாரிப்பாளரிடமும் கதையைக் கூறுங்கள் என்று சொல்லும்போது தயாரிப்பாளரை மதிக்கும் பண்பை கற்றுக்கொண்டேன்.
வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழி இருக்கு. ஒண்ணு கஷ்டப்பட்டு முன்னேறி பெரிய உச்சமான ஒரு இடத்தை அடைவது. மற்றொன்று அந்த இடத்தில் இருக்கும் ஒருவரைத் அட்டாக் செய்து பேசி பிரபலம் அடைவது. தனுஷ் இதனை கூறியபோது அரங்கமே அதிர்ந்தது. பின்னர் அவர் மீண்டும் பேசியதாவது: 40 வருடங்களாக அவரால் வாழ்ந்தவர்களும், பிழைத்தவர்களும். இவரைப் பற்றி தவறாகப் பேசியும், பழுத்த மரம்தான் கல்லடி படும் என்று பொறுமையாய் இருந்து வருகிறார். அந்த பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.
சமீபகாலமாகப் பலரும் மனது வருத்தப்படும்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவேண்டுமா என்றேன். அதற்கு அவர், " எல்லாரும் நண்பர்கள்தான் எல்லாரையும் கூப்பிடுங்கள்" எனச் சிரித்துக்கொண்டே கூறினார். இன்னா செய்தாருக்கும் நன்மை செய்து விடல் என்ற திருக்குறளுக்கு ஏற்ப வாழ்பவரிடமிருந்து பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் கற்று கொண்டேன்.
முதலில் வில்லன், குணசித்திர நடிகர், பிறகு ஹீரோ, ஸ்டார், ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார், இன்று தலைவர், நாளை..... உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன். மேலும் இந்த படத்தை நான் ஒரு தயாரிப்பாளராக தயாரிக்கவில்லை. நான் பத்து வயது இருக்கும்போது பாட்ஷா படத்தை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்து டிக்கெட் எடுத்து பார்த்த ஒரு ரசிகனாகத்தான் தயாரித்துள்ளேன்' என்று தனுஷ் கூறினார்.
Wunderbar Films - live https://t.co/edqVFsTVvv
— Wunderbar Films (@wunderbarfilms) May 9, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com