close
Choose your channels

சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை: தனுஷ்

Wednesday, October 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில்  முதலில் சிம்பு நடிப்பதாகத்தான் இருந்தது. பின்னர் ஒருசில காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்றும், அதன்பின்னர் தனுஷ் 'அன்பு' கேரக்டரில் நடித்தார் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூறினார்.

இந்த நிலையில் தனுஷ் இதுகுறித்து பேசியபோது, ''வடசென்னை' படத்தில் 'அன்பு' கேரக்டரில் சிம்பு நடிக்கவிருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியபோது உண்மையில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கேரக்டருக்கு டெலண்ட் உள்ள சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் இயக்குனரிடம் கூறினேன். பின்னர் அவர் இந்த படத்தில் இன்னொரு வலிமையான கேரக்டர் இந்த படத்தில் உள்ளது. அந்த கேரக்டரில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் என்னிடம் வேண்டுகோள் நடித்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

எனக்கு பெருந்தன்மை உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அந்த அளவுக்கு பெருந்தன்மை இல்லை. சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, தயவுசெய்து என்னை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்று தனுஷ் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment