'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்!

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியான ’நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் மேனகா கேரக்டரில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அடுத்து ’நெற்றிக்கண்’ திரைப்படத்தின் கதை திரைக்கதை ஆசிரியர் நான் தான் என்றும் என்னிடம் அனுமதி வாங்காமல் அந்த படத்தை யாரும் ரீமேக் செய்ய முடியாது என்றும் இயக்குனர் விசு ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை அடுத்து ’நெற்றிக்கண்’ படத்தில் நடிப்பதை தனுஷ் கைவிட்டு விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் விசு தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து கூறிய போது ’தனுஷ் தன்னை இதுகுறித்து தொடர்பு கொண்டதாகவும், தன் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவருடைய தந்தை தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததை நினைவு கூறியதாகவும் கூறினார்.

மேலும் ’நெற்றிக்கண்’ ரீமேக்கில் தான் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி உண்மை அல்ல என்றும், ஒரு பேட்டியின்போது ரஜினிகாந்த் நடித்த படங்களில் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு ’நெற்றிக்கண்’ என்று பதில் அளித்ததாகவும் மற்றபடி அந்த படத்தில் நடிக்கும் ஐடியா இப்போதைக்கு தனக்கு இல்லை என்றும் அது தனக்கு ரொம்ப பிடித்த படம் என்று மட்டுமே கூறியதாகவும் கூறினார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு விசு சமாதானம் அடைந்ததாக கூறப்படுகிறது.
 

More News

மூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு

பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்த திரைப்படம் 'பொன்மாணிக்கவேல்'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..!

உட்கார்ந்து எழும் இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை தோப்புக்கரணம் போடுவதுபோல் அமர்ந்து எழுந்தால் இலவசமாக டிக்கெட் பெறலாம்.

கவுதம் மேனன் பிறந்த நாளில் ஒரு ரொமான்ஸ் அறிவிப்பு

பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் பிறந்த நாளை இன்று தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது. அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை

இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்: சமந்தா குறித்து அதிதிராவ் ஹைத்ரி

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தப் படம் 'ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு

'காமத்தை விட கடமை முக்கியம்': 'நாயே பேயே' டிரைலர்

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்த 'ஒரு குப்பை கதை' கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படம் 'நாயே பேயே'. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது