தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தில் 2 பிரபல நாயகிகள்

  • IndiaGlitz, [Wednesday,November 02 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் திரைப்படமான 'கோச்சடையான்' படத்தை இயக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள 2வது படமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்கள் காஜல் அகர்வால் மற்றும் மஞ்சிமா மோகன் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தில் மூன்றாவது நாயகி ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்குள் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.