'தி கிரே மேன்' புரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷின் மகன்கள்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தனுஷின் கேரக்டர் படத்தில் திருப்புமுனை கேரக்டர் என்பதால் ஹாலிவுட் திரையுலகில் இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு பிரபலமாவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டிரைலர் மற்றும் புரமோஷன் வீடியோக்களில் தனுஷின் காட்சிகள் ரசிகர்களை அசர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
200 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாக தனுஷ் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் அது குறித்த வீடியோக்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘தி கிரே மேன்’ புரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் சென்று இருந்தார் என்பதும் இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Dhanush with his sons..❣️#TheGrayMan pic.twitter.com/vnMrVsdTIZ
— Laxmi Kanth (@iammoviebuff007) July 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com