தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் மகன் யாத்ரா.. என்ன செய்ய போகிறார்?

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் தனுஷின் மகன் யாத்ரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷின் உறவினர் மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் அனிதா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் தனுஷ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்றும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தனுஷின் மகன் யாத்ரா எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தனுஷ் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ள நிலையில் தற்போது அவரது மகனும் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.