தனுஷ் சகோதரியின் ரொமான்ஸ் பதிவு.. கணவர் முத்தமிட்ட புகைப்படம் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷின் சகோதரி கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த ரொமான்ஸ் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து நடிகை ராதிகா உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவர் கார்த்திகா என்பதும் அவர் மகப்பேறு மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கார்த்திகா, கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று கார்த்திக் - கார்த்திகா ஜோடி தங்களது திருமணநாளை கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் ’நாம் இருவரும் அறிமுகம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டது, திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டது, இந்த ஆண்டுகளில் நாம் ஒருநாள் கூட சண்டை போடாமல் இருந்ததில்லை, ஆனால் நம்முடைய சண்டைதான் நம்மை ஒருவருக்கொருவர் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது, திருமண நாள் நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
கார்த்திகாவின் இந்த பதிவுக்கு ராதிகா சரத்குமார், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்களும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த பதிவில் அவர் தனது கணவர் முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments