மீண்டும் செல்வராகவன் படத்தில் இணைந்த தனுஷ்

  • IndiaGlitz, [Friday,October 14 2016]

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளார். ஆனால் இம்முறை தனுஷ் நடிகராக இன்றி பாடகராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் அமைந்த இந்த பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் இந்த பாடலை பாட தனக்கு பெரும் சவாலாகவும், கடினமாகவும் இருந்ததாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களின் பேராதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் வரும் நவம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது