பிரபல பெண் நடன இயக்குனர் படத்தில் தனுஷ்

  • IndiaGlitz, [Friday,December 02 2016]

கோலிவுட் திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என சகலகலாவல்லவனாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல பெண் நடன இயக்குனர் காயத்ரி ரகுராமின் 'யாதுமாகின் நின்றாய்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தனுஷ் தற்போது பாடியுள்ளார். இந்த தகவலை காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
தனுஷ் பாடிய மற்ற பாடல்களை போலவே இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது