'நிலா அது வானத்து மேல' பாடலை தாலாட்டு பாடலாக மாற்றிய தனுஷ்: கைதட்டி பாராட்டிய இசைஞானி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவின் ’ராக் வித் ராஜா’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்தனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், ‘நிலா அது வானத்து மேலே’ என்ற பாடலை தனது மகன்களுக்காக தாலாட்டுப் பாடலாக மாற்றி பாடல் வரிகள் எழுதியதாக இளையராஜாவிடம் கூறினார். இதனையடுத்து இளையராஜாவிடம் அனுமதி பெற்று தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இருவரையும் நினைத்துக்கொண்டே தாலாட்டு பாடலை பாடிக் காண்பித்தார்.
கண்மூடிடு பூவிழி மானே
தாலாட்டு பாடிட நானே
என் தோள்கள் உன் தோளில்தானே ஆராரோ ஆரீரொ
என்று ‘நிலா அது வானத்து மேலே’ பாடலை மாற்றி பாடிய தனுஷை இசைஞானி இளையராஜா கைதட்டி பாராட்டினார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’நாயகன்’ படத்தில் உருவான இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் அந்த பாடலை தனுஷ் தாலாட்டுபாடலாக மாற்றியது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Mesmerizing voice ??
— Anbuselvan™?? (@Raj_twetz) March 19, 2022
Especially ilayaraja song !@dhanushkraja ??❤#RockWithRaja #Dhanush pic.twitter.com/Nqxy97X4e5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com