ஜிவி பிரகாஷூக்காக தனுஷ் பாடிய பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலவித அவதாரங்களில் ஜொலித்து வருபவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவ்வபோது தனுஷ், மற்ற நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடி வருவது தெரிந்ததே
அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்று ‘ஜெயில்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில், ’விரைவில் வெளியாகவிருக்கும் ’ஜெயில் படத்தில் இடம்பெற்ற ’காத்தோட’ என்ற சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலும் படமும் மிகச்சிறப்பாக வந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்
பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’ படத்தில் ஜிவி பிரகாஷ், ராதிகா, ரோனிட் ராய், கவுதம் குலாட்டி, சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, ரோபோ சங்கர், பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.
Very very soon . Film has come out really really good .. kaathodu single sung by dhanush will drop soon too ...
— G.V.Prakash Kumar (@gvprakash) March 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com