தனுஷ், சிம்பு நாயகியின் முதல் தயாரிப்பு திரைப்படம் ரிலீஸ்.. பாசிட்டிவ் ரிசல்ட் என தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் தனுஷ், சிம்பு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தயாரித்த முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
சிம்பு நடித்த ’குத்து’ மற்றும் தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், பல கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ரம்யா தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம் ’சுவாதி முத்தின மலே ஹனியே. கன்னடத்தில் உருவான இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ரம்யா, தனது முதல் தயாரிப்பு படம் ரிலீஸ் ஆகி உள்ளதாகவும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ஆதரவு தருமாறும் இந்தப் படத்தின் கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
ராஜ் பி ஷெட்டி மற்றும் சிரி ரவிக்குமார் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜ் பி ஷெட்டியே இயக்கியுள்ளார்.தன்னுடைய ஆப்பிள் பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்திற்காக ரம்யா இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
My first film as a producer Swathi Muthina Male Haniye is now screening at the movies- please do watch. I hope you all like it. Book your tickets on bookmyshow! pic.twitter.com/11LYxcxQHs
— Ramya/Divya Spandana (@divyaspandana) November 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments