இந்தியா இந்தி நாடு அல்ல.. 'நாட்டு நாட்டு' பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், சிம்பு பட நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா என்பது இந்தி நாடல்ல இந்திய திரை உலகம் என்றால் பாலிவுட் திரை உலகம் அல்ல என தனுஷ் படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியாவுக்கு இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பதும் இரண்டுமே தென்னிந்திய திரை உலகினர் பெற்றுள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நாடு முழுவதும் ஆஸ்கர் வென்ற படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’, சிம்பு நடித்த ‘குத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை திவ்யா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது;
இந்தியா என்றாலே வெளிநாட்டினர் கண்களுக்கு இந்தி நாடாகவே கருதப்பட்டு வரும் நிலையில் தெலுங்கு திரைப்பட பாடல் தென்னிந்தியாவை உலகறிய செய்துள்ளது. இந்தியா என்பது இந்தி நாடு என்ற மாயை உடைத்தெடுக்கப்பட்டுள்ளது,
அதேபோல் இந்தியா வெறும் பாலிவுட் திரையுலகம் மட்டும் கிடையாது, தெலுங்கு திரைப்படம் தான் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது, தமிழ்நாட்டின் இரண்டு பெண்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு ஏராளமான ஒரு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. நடிகை திவ்யா, காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
I’m also really glad Naatu Naatu was performed in Telugu - about time the world knows that India is a diverse country of different cultures and languages. India is not just Hindi. India is not just Bollywood. Stereotyping is lazy thinking. https://t.co/fGPhAMwkzX
— Ramya/Divya Spandana (@divyaspandana) March 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments