அஜித், விஜய்யை அடுத்து ஐரோப்பா செல்லும் தனுஷ்
- IndiaGlitz, [Wednesday,May 10 2017]
தல அஜித் தற்போது நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் உள்ளார். அதேபோல் இளையதளபதி விஜய்யும் அவர் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளில் இன்னொரு நாடான மாசிடோனியாவில் உள்ளார். இந்த நிலையில் தனுஷூம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பா செல்லவுள்ளார்.
தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்த நிலையில் ஹாலிவுட் படமான 'The Extraordinary Journey of the Fakir' என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக பெல்ஜியம் நாட்டின் பிரச்சல்ஸ் நகருக்கு செல்லவுள்ளார்.
பிரபல ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கும் இந்த படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களான Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் 'பண்டிட் குவீன்' படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.