அட்டகாசமான வில்லத்தன நடிப்பு: தனுஷின் 'நானே வருவேன்' டீசர்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன். ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 2 நிமிடம் உள்ள இந்த டீசரில் இருந்து அட்டகாசமான வில்லன் கெட்டப்பிலும் அப்பாவியான ஹீரோ கெட்டப்பிலும் இருக்கும் இரண்டு தனுஷ் கேரக்டர்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று தெரியவருகிறது.

மேலும் இந்த படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் பிரபு, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகிகளாக இந்துஜா மற்று, எல்லி அர்ரம் நடித்துள்ளனர்.

தனுஷின் வித்தியாசமான நடிப்பு குறிப்பாக வில்லன் தனுஷின் நடிப்பு நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் ’திருச்சிற்றம்பலம்’ படத்தை அடுத்து மேலும் ஒரு வெற்றி படம் தனுஷுக்கு தயாராக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.