'நானே வருவேன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கலைப்புலி எஸ் தாணுவின் அதிரடி முடிவு!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிய ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்ததை அடுத்து இந்த படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ’நானே வருவேன்’ படம் முதல் நாளில் 10 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பத்திரிகை ,ஊடக , ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றி நடை போடுகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இயக்குனர் செல்வராகவனை நேரில் சென்று சந்தித்து தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மேலும் ‘நானே வருவேன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் செல்வராகவனுடன் ஒரு படத்தில் இணைய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

More News

அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர்? அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்' திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' என்ற படத்தில் நடித்து

மெட்ரோ சிரிஷின் 'பிஸ்தா': 'என்னை கொல்ல வந்த' லிரிக் பாடல் ரிலீஸ்

மெட்ரோ சிரிஷ் நடிக்கும் 'பிஸ்தா' படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் ட்ராக்காக 'என்னை கொல்ல வந்த' பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

டீன் ஏஜ் பெண்ணுக்கு இணையாக டான்ஸ் ஆடும் 55 வயது நதியா.. செம வீடியோ

நடிகை நதியா கடந்த 80, 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் என்பதும் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் என்பதும் தெரிந்ததே. 'பூவே பூச்சூடவா' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்

'கேஜிஎஃப்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் 'விக்ரம்' - 'சூரரைப்போற்று கனெக்சன்!

'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப்' 2' ஆகிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்த நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள திரைப்படத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' மற்றும் சூர்யாவின் 'சூரரைப்போற்று கனெக்ஷன்

விஷால் வீடு தாக்குதல், சிவில் இஞ்ஜினியர் உள்பட 4 பேர் கைது: தாக்குதலுக்கு கூறிய அதிர்ச்சி காரணம்!

 சமீபத்தில் நடிகர் விஷாலின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விஷால் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது