செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ’என்ஜிகே’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுத துவங்கி விட்டதாக அறிவித்து இருந்தார்

இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி ஒன்றில் விழாவில் கலந்துகொண்ட செல்வராகவன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ’புதுப்பேட்டை 2’ படம் தான் தனது அடுத்த படம் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த தனுஷ் நடிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தனுஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் செல்வராகவன் இயக்கிய ’புதுப்பேட்டை’ திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் செல்வராகவன் இயக்க வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் தற்போது ரசிகர்களின் கோரிக்கை நிறைவேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தம்பி மரணம் குறித்து திடுக்கிடும் தகவலை தெரிவித்த நடிகர் ஆனந்த்ராஜ்

பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் கனகசபை என்பவர் நேற்று புதுவையில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியை

விஜய் அரசியலுக்கு வந்தால் என் சப்போர்ட் அவருக்குத்தான்: பிரபல ஹீரோ

தமிழக அரசியல் களம் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திரையுலக ஜாம்பவான்களாக கமலஹாசன் ரஜினிகாந்த் ஆகிய நடிகர்களை எதிர்நோக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கொரானா வைரஸை பாரதியாருடன் ஒப்பிட்ட குட்டிக்கதை பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற குட்டிக்கதை என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

ஹர்பஜன்சிங் லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் 'பிரண்ட்ஷிப்' என்றும் இந்த படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்தது

விஷால் நாகரீகம் தெரிந்தவராக இருந்தால்... பாரதிராஜா ஆவேசம்

தயாரிப்பாளர் சங்கம் தற்போது தமிழக அரசின் தனி அதிகாரி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் சமீபத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்தல்