காட்டுல ஆபத்தான மிருகம் சிங்கம் இல்லை.. ஓநாய் ஸ்கெட்ச் போட்டா சிங்கத்தையே வீழ்த்திடும்: 'ராயன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,July 16 2024]

தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தனுஷின் ஐம்பதாவது படம் என்ற பெருமை பெற்றுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியானவுடன் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்ரெய்லர் வீடியோவில் ’ஒரு காட்டில் ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என்று செல்வராகவன் கேட்க, சிங்கம் புலி எல்லாம் வலிமையான மிருகம், ஆனால் ஆபத்தான மிருகம் ஓநாய் தான்’ என்று கூறுகிறார். சிங்கத்துடன் நேருக்கு நேர் மோதினால் ஓநாய் தோற்றுவிடும், ஆனால் ஸ்கெட்ச் போட்டால் சிங்கத்தை வீழ்த்தி விடும்’ என்று அவர் கூறுகிறார்.

இந்த கதைக்கும் ‘ராயன்’ கதைக்கும் தொடர்பு இருப்பதாக படக்குழுவினர் கோடிட்டு காட்டும் நிலையில் அதுபோலவே தனுஷ் ஸ்கெட்ச் போட்டு ஒவ்வொருவரையும் வீழ்த்தும் காட்சிகளும் இந்த டிரைலர் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

மொத்தத்தில் தனுஷின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், எஸ்ஜே சூர்யாவின் மாஸ் காட்சிகள் மற்றும் ஏஆர் ரகுமானின் மிரட்டலான பின்னணி இசை என இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

🔮உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய் இல்லாமால் வாழ சக்தி வாய்ந்த சித்தர் மந்திரம்.!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூ சேனலில், பிரபல சித்தர் மருத்துவர் கிரிமாஸ்டர் நாராயண சுவாமிகள் அவர்களுடனான காணலை தவற விடாதீர்கள்!

ஜூலை 20ஆம் தேதி எல்லோரும் எழும்பூருக்கு வாருங்கள்.. அழைப்பு விடுத்த பா ரஞ்சித்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலையை கண்டித்து நினைவேந்தல் பேரணி சென்னை எழும்பூரில் வரும்

ஒரே படத்தில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஒரே படத்தில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று வருத்தப்படுகிறேன்: மஞ்சிமா மோகன்..

சில சமயம் கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று வருத்தப்பட்டேன் என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்பானி குடும்ப திருமணத்திற்கு ஏன் செல்லவில்லை.. நடிகை டாப்சி விளக்கம்..!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலகின் பல பிரபலங்கள் வருகை