மீண்டும் இணையும் முப்பெரும் வெற்றி கூட்டணியில் தனுஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இணைந்து துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ‘மயக்கம் என்ன’’ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளனர் என்பதும் அந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த செய்தியை தற்போது செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையவுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏற்பதாகவும் செல்வராகவன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து தனுஷ் செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய முப்பெரும் கூட்டணி வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Extremely happy to join hands for 8th time with @thisisysr !! @dhanushkraja
— selvaraghavan (@selvaraghavan) December 23, 2020
Kalaippuli S Thanu @theVcreations pic.twitter.com/AKWbirnFGF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments