தனுஷின் 'வாத்தி' படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Thursday,December 30 2021]

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’வாத்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் தமிழ் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு நவீன் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News

கார்த்தி-லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' படம் குறித்த சூப்பர் தகவல்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்தின் இறுதியில் அடுத்த பாகம் உருவாகும் வகையில் காட்சிகள்

Indiaglitz வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றம்: நடுவராக மதுரை முத்து!

Indiaglitz பெருமையுடன் வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றம் சென்னையில் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது.

மறைந்த தாயாருக்காக நினைவில்லம் கட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்: வைரல் வீடியோ!

தமிழ் திரை உலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது தாயாருக்காக நினைவு இல்லம் கட்டி வருவதாக வெளியிட்டுள்ள வீடியோ

மீண்டும் அபிநய் பிரச்சனையை இழுக்கும் பாவனி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இறுதிகட்டத்தில் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவர்

பிக்பாஸ் எவிக்சன்: ஆபத்தான நிலையில் இருக்கும் மூன்று போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 88 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் அடிப்படையில் ஒரு போட்டியாளர்