'நானே வருவேன்' படத்தின் ஒன்லைன் கதை: தனுஷ் வெளியிட்ட மாஸ் தகவல்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என்றும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ஒன்லைன் கதையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரே ஒரு
ஊருக்குள்ளே,
இரண்டு ராஜா இருந்தாராம்..
ஒரு ராஜா நல்லவராம்,
இன்னொரு ராஜா கெட்டவராம்

ஏற்கனவே இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தனுஷின் இந்த ட்வீட்டை அடுத்து அவர் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் இரண்டு தனுஷுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த படத்தின் கதை என்பதும் மேற்கண்ட ட்விட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உறியடி விஜய்குமாரின் புதிய படம்: 62 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு!

'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6, அதிகாரபூர்வ அறிவிப்பு: தொகுத்து வழங்குபவர் இவர் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. 

'நானே வருவேன்' படத்தின் ரிலீஸ் அப்டேட்: கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகையுடன் தேவிஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணமா?

பிரபல நடிகையுடன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.