'நானே வருவேன்' படத்தின் ஒன்லைன் கதை: தனுஷ் வெளியிட்ட மாஸ் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என்றும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ஒன்லைன் கதையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரே ஒரு
ஊருக்குள்ளே,
இரண்டு ராஜா இருந்தாராம்..
ஒரு ராஜா நல்லவராம்,
இன்னொரு ராஜா கெட்டவராம்
ஏற்கனவே இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தனுஷின் இந்த ட்வீட்டை அடுத்து அவர் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் இரண்டு தனுஷுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த படத்தின் கதை என்பதும் மேற்கண்ட ட்விட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஒரு
— Dhanush (@dhanushkraja) September 5, 2022
ஊருக்குள்ளே,
இரண்டு ராஜா இருந்தாராம்..
ஒரு ராஜா நல்லவராம்,
இன்னொரு ராஜா கெட்டவராம் ??#Naanevaruven @selvaraghavan @theVcreations pic.twitter.com/fZCDa1OdN4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com