தனுஷ் இடத்தை பிடித்த அமலாபால்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷுடன் இணைந்து 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த நடிகை அமலாபால், திருமணத்திற்கு பின்னரும் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் கோலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அமலாபால் சூர்யாவுடன் நடித்த 'பசங்க 2' விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் உலகின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான Intel Security என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 'Most Sensational Celebrity' என்ற சர்வேயை எடுத்து வருகிறது. இந்த வருடம் எடுக்கப்பட்ட சர்வேயில் நடிகை அமலாபால், நடிகை தனுஷை பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
கோலிவுட் செலிபிரட்டிகளின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் சைபர் க்ரைம் கிரிமினல்கள் குறித்து Most Sensational Celebrity என்ற சர்வேயை எடுத்து வரும் இந்த நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு எடுத்த சர்வேயில் நடிகர் தனுஷ் டாப் இடத்தில் இருந்தார். ஆனால், இந்த வருடம் அந்த பட்டியலில் இருந்து தனுஷ் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் அமலாபால் இணைந்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் நான்கு இடத்தில் ஆர்யா, சூர்யா, விஜய், எமிஜாக்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது இடத்தில் தனுஷிற்கு பதிலாக அமலாபால் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட செலிபிரட்டிகளின் புகைப்படங்களை சைபர் க்ரைம் கிரிமினல்கள் அதிகளவு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com