மீண்டும் தனுஷுடன் இணையும் வரலட்சுமி?

  • IndiaGlitz, [Thursday,November 22 2018]

நடிகர் தனுஷின் 'மாரி 2' படத்தில் நடிகை வரலட்சுமி, ஐஏஎஸ் அதிகாரி விஜயா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விருந்தாக வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் வரலட்சுமி நடித்து வரும் இன்னொரு படமானா 'வெல்வெட் நகரம்' படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதையும் அந்த டிரைலரை ஒரு பிரபலம் வெளியிடவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். அந்த பிரபலம் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை! 'மாரி 2' நாயகன் தனுஷேதான். தனுஷ் நாளை மாலை 6 மணிக்கு வரலட்சுமியின் 'வெல்வெட் நகரம்' டிரைலரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவதன் மூலம் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,.