தளபதியின் திரையுலக தம்பி தனுஷின் முக்கிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனுஷ் வெளியிட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’பொம்மை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இந்த படத்தின் டைட்டிலை அமிதாப்பச்சனின் சக நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனும், தளபதியின் திரையுலக தம்பியுமான தனுஷ் வெளியிடுவார் என எஸ்ஜே சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். தளபதியின் திரையுலக தம்பி என தனுஷை எஸ்ஜே சூர்யா குறிப்பிட்டது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைப்பக்கத்தில் எஸ்ஜேசூர்யா-ராதாமோகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். பொம்மை என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஒரு பொம்மையுடன் கைகோர்த்தபடி எஸ்ஜே சூர்யா நிற்கும் காட்சியும் உள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில்., ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தில் எஸ்.ஜேசூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Happy to release the First Look of @Radhamohan_Dir's BOMMAI starring @iam_SJSuryah & @priya_Bshankar.. A @thisisysr musical..@Richardmnathan editor #Anthony @KKadhirr_artdir
— Dhanush (@dhanushkraja) December 31, 2019
Wishing the entire team all success ..... pic.twitter.com/rwfMtVf4pA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments