close
Choose your channels

ஜிவி பிரகாஷ் படத்திற்கு புரமோஷன் செய்யும் தனுஷ்

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்த படம் ஒன்றுக்கு தனுஷ் இன்று புரமோஷன் செய்யவுள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கிய 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு முன்னரே இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் இசை ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து புரமோஷன் செய்கிறார். இந்த தகவலை ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார்.

ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளிவெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment