தனுஷ் வெளியிட்ட 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்!

  • IndiaGlitz, [Sunday,August 04 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது படைப்பாக தயாரிக்கும் திரைப்படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம் 

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட உள்ளதாக நேற்றே நாம் அறிவித்த நிலையில் சற்று முன் தனுஷ் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே நாம் கணித்தபடி இந்த படத்தின் டைட்டில் 'களத்தில் சந்திப்போம்' என்று வைக்கப்பட்டுள்ளது 

இந்த படத்தை என் ராஜசேகர் இயக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவும் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்ய உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போது இது ஒரு அரசியல் மற்றும் ஆக்சன் கதையம்சம் கொண்ட படம் என தெரிகிறது

More News

சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'காப்பான்'.

சேரனை அழைத்து வாருங்கள் விஜய்சேதுபதி: ஒரு இயக்குனரின் வேண்டுகோள்

பிக்பாஸ் வீட்டில் சேரனை சரவணன் மரியாதைக்குறைவாக பேசியதும், கமல் அறிவுரைக்கு பின்னர் சேரனிடம் சரவணன் மன்னிப்பு கேட்டதும் முடிந்து போன விஷயமாக கருதப்படுகிறது.

ஒரே நாளில் இரண்டு படங்களின் விழா! விஜய்சேதுபதி அசத்தல்

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப் படங்களில்  நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. எனவே தான் இரண்டு மாதத்திற்கு ஒரு விஜய்சேதுபதி படம் வெளி வருவது

மாரி செல்வராஜின் கவிதை: பிரபல அரசியல்வாதியை தாக்கி எழுதப்பட்டதா?

கோலிவுட் திரையுலகில் 'பரியேறும் பெருமாள்' என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ், ஒரு அரசியல் கட்சி தலைவரை மறைமுகமாக தாக்கி

சொந்த உழைப்பில் வாழ்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள்: பிரபல நடிகர் கருத்து

அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவை என்ற நிலை காமராஜர், கக்கன் காலத்துடன் முடிந்துவிட்டது. இன்றைய அரசியல் ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள்