ஆர்மோனிய பெட்டியுடன் சென்னை வந்த இசைஞானி: 'இளையராஜா' பர்ஸ்ட் லுக் போஸ்டர்..
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஏற்கனவே வெளியான தகவலை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
படத்தின் டைட்டிலே ‘இளையராஜா’ என்று வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இளையராஜா சிறுவயதில் ஒரு ஆர்மோனிய பெட்டியுடன் சென்னைக்கு வந்த புகைப்படம் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு ஒரு ஆர்மோனிய பெட்டியுடன் வந்த இளையராஜா என்று இசை ராஜ்யத்தின் அரசனாக இருக்கும் அவரது வாழ்க்கை வரலாறு தான் இந்த படத்தின் கதையாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Honoured @ilaiyaraaja sir 🙏🙏🙏 pic.twitter.com/UvMnWRuh9X
— Dhanush (@dhanushkraja) March 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments