ஒரு சின்ன தடயம் கூட கிடைக்கல.. தனுஷ் வெளியிட்ட த்ரில்லர் படத்தின் டீசர்..!

  • IndiaGlitz, [Wednesday,June 19 2024]

நடிகர் தனுஷ் சற்றுமுன் ’லெவன்’ என்ற த்ரில்லர் படத்தின் டீசரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் நவீன் சந்திரா. இவர் ஏற்கனவே ’சிவப்பு’ ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ’லெவன்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நவீன் சந்திரா ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திறமையான அதிகாரிகளால் கூட அந்த கொலையை துப்பு துலக்க முடியவில்லை. சிசிடிவி காட்சி இல்லை, பிங்கர் பிரிண்ட் என எந்த தடயமும் இல்லாமல் கொலை செய்ய வந்த நபர் யார் என்பதை காவல்துறை அதிகாரி நவீன் சந்திரா கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

நவீன் சந்திரா, ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை லோகேஷ் அஜிஸ் என்பவர் இயக்கி உள்ளார். டி இமான் இசையில், கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மீது கேஸ் போடுவேன்: மிரட்டல் விடுத்த ரசிகர்..! என்ன காரணம்?

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மீது கேஸ் போடுவேன் என மிரட்டல் விடுத்த ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா தகவல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்து இருப்பதாகவும்

ஆர்ஜே பாலாஜியின் 'மூக்குத்தி அம்மன்' 2ஆம் பாகத்தின் டைட்டில் இதுவா? நயனுக்கு பதில் யார்?

நடிகை நயன்தாரா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம்

சாமியை கொன்னுட்டேன்... விமல் நடித்த 'சார்' டீசர் ரிலீஸ்..!

நடிகர் விமல் நடிப்பில், பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான 'சார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில்

டைம் டிராவல் கதைன்னு சொன்னாங்களே.. விஜய்யின் 'கோட்' படத்தின் கதை லீக்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் கதை டைம் டிராவல் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதை சுருக்கம் வெளியாகி உள்ள நிலையில்