close
Choose your channels

தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் பட போஸ்டர்: இணையத்தில் வைரல்

Sunday, November 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் உள்பட பல நடிகர்களை சிறப்பாக நடிக்க வைத்து பிரபலமாக்கிய பெருமை இயக்குனர் செல்வராகவனுக்கு உண்டு என்பதும், அவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் பல்வேறு விதமான நடிப்பு அனுபவங்களைப் பெற்று வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பல நடிகர்களை நடிக்க வைத்த செல்வராகவன் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றும் அந்தத் திரைப்படத்திற்கு ’சாணிக் காகிதம் என்று டைட்டில் வைக்கப்பட்டதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தீபாவளி போனசாக இன்று ’சாணிக் காகிதம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் குத்தவைத்து உட்கார்ந்தவாறு இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது

வித்தியாசமான தோற்றத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருக்கும் இந்த போஸ்டரே இந்த படம் வித்தியாசமான படம் என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment