தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் பட போஸ்டர்: இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]

தனுஷ் உள்பட பல நடிகர்களை சிறப்பாக நடிக்க வைத்து பிரபலமாக்கிய பெருமை இயக்குனர் செல்வராகவனுக்கு உண்டு என்பதும், அவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் பல்வேறு விதமான நடிப்பு அனுபவங்களைப் பெற்று வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பல நடிகர்களை நடிக்க வைத்த செல்வராகவன் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றும் அந்தத் திரைப்படத்திற்கு ’சாணிக் காகிதம் என்று டைட்டில் வைக்கப்பட்டதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தீபாவளி போனசாக இன்று ’சாணிக் காகிதம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் குத்தவைத்து உட்கார்ந்தவாறு இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது

வித்தியாசமான தோற்றத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருக்கும் இந்த போஸ்டரே இந்த படம் வித்தியாசமான படம் என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்

More News

நான் பாஜகவில் இணைகிறேனா? சந்தானம் அளித்த விளக்கம்!

கடந்த சில மாதங்களாக தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் பதவி ஏற்ற பின்னர் குஷ்பு

சுவாரஸ்யமற்ற போட்டியாளர் : பாலாஜியை கட்டம் கட்டிய சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 41 நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் இன்று 42வது நாளில் முதல் புரமோ வெளியாகியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்!

நேற்றைய தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்ற நிலையில் கோலிவுட் திரையுலக பிரமுகர்களும் தீபாவளி கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை

தீபாவளி ஸ்பெஷலாக பாவாடை தாவணியில் லாஸ்லியா: வைரலாகும் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் செய்தி வாசிப்பாளரான அனிதா இருப்பது போல் கடந்த சீசனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா,

இலவச வைஃபையுடன் மல்டிபிளக்ஸ் தியேட்டர்: மதுரை மக்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தால் திறக்கப்பட்டது.