'ராயன்' படத்தின் இன்றைய அறிமுகம் இவர்தான்: தனுஷ் வெளியிட்ட மாஸ் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

தனுஷ் நடித்து இயக்கி வரும் ’ராயன்’ திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்களின் போஸ்டர்களை தினமும் மாலை 6 மணிக்கு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இதுவரை எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் மற்றும் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர்களின் அட்டகாசமான போஸ்டர்களை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் நடிகரும், பிக் பாஸ் போட்டியாளருமான சரவணன் போஸ்டரை சற்றுமுன் தனுஷ் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. சரவணன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது கெட்டப் மட்டும் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் தனுஷின் ’ராயன்’ படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய அந்த படம் தனுஷின் 50வது படம் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.