'பிக்பாஸ்' பிரபலம் நடித்த படத்தின் பாடலை வெளியிட்ட தனுஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல நட்சத்திரங்களுக்கு திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்பது தெரிந்ததே
அந்த வகையில் ’பிக்பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ஏற்கனவே பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் திரைப்படமான ’ஓமண பெண்ணே படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’ஓமண பெண்ணே படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ’கண்மூடி கிடக்கானே பையா’ என்று தொடங்கும் இந்த பாடலை சிந்தூரி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், அன்புதாசன், அஸ்வின்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy to release the #LazySong from #OhManapenne https://t.co/oSlARDyYm0
— Dhanush (@dhanushkraja) February 26, 2021
All the best to @iamharishkalyan @priya_Bshankar @KaarthikkSundar @Composer_Vishal & team
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com