சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தை பெற்றார் தனுஷ்

  • IndiaGlitz, [Monday,September 14 2015]

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் இணையதளத்தில் தென்னிந்திய நடிகர்களில் 2 மில்லியன்களுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த பெருமையை அவருடைய மருமகனும், பிரபல நடிகருமான தனுஷ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேற்று 2 மில்லியன் பேர் ஃபாலோயர்களை தனுஷின் டுவிட்டர் தளம் பூர்த்தி செய்தது. இதுகுறித்து கருத்து கூறியிருந்த தனுஷ், '2 மில்லியன் ஃபாலோயர்ஸ் என்ற பெருமையை கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னை நேசிக்கும், வழிகாட்டும், ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தனுஷ் தற்போது 'விஐபி 2', பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துவிட்டு துரைசெந்தில்குமார் இயக்கத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும், பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

More News

ரசிகர்களுக்கு 'தல' வழங்கும் வியாழக்கிழமை விருந்துகள்

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்...

அஜீத் கெட்டப்பில் அமீர்கான் நடிக்கும் 'டங்கல்'?

கடந்த வருட இறுதியில் 'பிகே' என்னும் இந்தியாவின் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ...

தல 56': கொல்கத்தா படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு மால் மற்றும் தனியார்...

சந்தானம் நடித்த 'வாலிப ராஜா' ரிலீஸ் தேதி

கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக மாறி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'இனிமே இப்படித்தான்'...

நீதிமன்றங்கள் கெட்டு போனால் நாடு உருப்படாது. ரஜினி பேச்சு

அரசியல்வாதிகள், பொதுமக்கள் கெட்டுப்போனால் கூட ஒரு நாடு உருப்பட்டுவிடும் ஆனால் நீதிமன்றங்கள் கெட்டு போனால் ...