'இரவின் நிழல்' புரமோஷனில் இணையும் தனுஷ்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்!

  • IndiaGlitz, [Monday,June 27 2022]

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல் திரைப்படம் வரும் ஜூலை ரிலீசாக இருப்பதாக பார்த்திபன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்ற 'இரவின் நிழல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பதும் இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ’இரவின் நிழல்’ திரைப்படம் ஜூலையில் வெளியாகும் என பார்த்திபன் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுகிறார் என பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை தமிழகத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.