ரஜினியின் கடைசி படத்தை தயாரிப்பது யார்? முன்னணி நிறுவனங்கள் போட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 167 ஆவது திரைப்படமான ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதனை அடுத்து அவர் நடிக்கும் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையுடன் முதல் கூடிய படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்றும், அந்த படத்துடன் அவர் திரை உலகுக்கு முழுக்கு கட்டிவிட்டு அரசியல் களத்தில் முழுநேரமாக இறங்க உள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்
இதனை அடுத்து ரஜினியின் கடைசி படத்தை தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏவிஎம், கலைப்புலி எஸ்.தாணு, கவிதாலயா உள்பட பல நிறுவனங்கள் ரஜினியை அணுகி அவருடைய கடைசி படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் ரஜினி மருமகனும் அவர் நடித்த ’பேட்ட’ படத்தை தயாரித்தவருமான தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினியின் கடைசி படத்தை தயாரிக்க விருப்பப்படுவதாகவும், அனேகமாக அவருக்கு ரஜினியின் கடைசி படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
ரஜினி - தனுஷ் மீண்டும் இணையும் இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என்றும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments