சிம்புவுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்தது ஏன்?
Wednesday, October 26, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் தனுஷ், சிம்பு தொழில் முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கின்றது என்பது இருவரின் நெருக்கமானவர்கள் அறிந்ததே. தனுஷ் படம் வெளியாகும்போது சிம்பு வாழ்த்து சொல்வதும், சிம்பு படம் வெளியாகும்போது தனுஷ் வாழ்த்தும் சொல்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று
இந்நிலையில் சமீபத்தில் வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீசர் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த நிலையில் இந்த டீசரை ரசித்த தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் கவுதம் மேனன், சிம்பு மற்றும் மஞ்சிமா மோகனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தை இயக்கிய கவுதம் மேனன் தற்போது தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments