close
Choose your channels

தனுஷ், பிரபுதேவா இணையும் இன்னொரு 'ரவுடி பேபி.. கலக்க காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’மாரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் பிரபுதேவா நடன இயக்கத்தில் உருவான இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி அசத்தலாக ஆடி இருப்பார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மீண்டும் தனுஷ் மற்றும் பிரபுதேவா இணையும் ஒரு பாடல் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பாடல் இடம் பெற்ற படம் தான் தனுஷின் 50வது படமான ’ராயன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ப்ரமோஷன் பணியை படக்குழுவினர் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

முதல் கட்டமாக ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த, பிரபுதேவா நடன இயக்கத்தில் உருவான ஒரு அட்டகாசமான பாடலை வெளியிட இருப்பதாகவும் இந்த பாடலுக்கு பின்னர் தான் டிசர் மற்றும் ட்ரெய்லர் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரும் ஜூன் அல்லது ஜூலையில் ‘ராயன்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment