இதற்கு முன் எங்கே பார்த்தேன்? மகனுடன் தனுஷ் இருக்கும் மாஸ் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

நடிகர் தனுஷ் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இதற்குமுன் நான் எங்கே பார்த்தேன் இதை’ என்ற கேள்வி குறியுடன் மகனுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தபின் அவரது திரையுலக கிராப் உச்சத்திற்கு சென்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாகவும் தனுஷ் சமீபத்தில் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தனுஷ் தனது இரண்டு மகன்களுக்காக மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ்வார் என்றும் இதற்காக இரு குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தனுஷுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்ய புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் ’இதற்கு முன் இதை நான் எங்கே பார்த்தேன் என்ற கேள்விக்குறியுடன் மகனுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து 45 நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் மூன்று லட்சம் லைக்ஸகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.