மகன்களுடன் மொட்டை மாடியில் விளையாடும் தனுஷ்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Sunday,August 23 2020]

கொரோனா லாக்டவுன் நேரத்தில் பிசியாக இருக்கும் பல நடிகர் நடிகைகள் கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகளாவது அவ்வப்போது தங்களது சமூக வளைதளத்தில் வித்தியாசமான, கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்கள் தங்களை மறக்காமலிருக்க முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் நடிகர்களோ என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாமல் உள்ளது. குறிப்பாக மாஸ் நடிகர்கள் குறித்த செய்திகள் எதுவுமே கடந்த சில நாட்களாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் பிஸியாக இருக்கும் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் தனுஷ் இந்த லாக்டவுன் நேரத்தில் முழுக்க முழுக்க தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார்.

சற்றுமுன் தனுஷ் தனது வீட்டின் மொட்டை மாடியில் தனது இரண்டு மகன்களுடன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மகன் அவரது முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பது போன்றும் இன்னொரு மகன் அவரது எதிரில் இருப்பது போன்றும் உள்ள இந்த புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’ஜகமே தந்திரம்’ ’கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், லாக்டவுன் முடிந்தவுடன் இந்தி படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து கார்த்திக் நரேன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

படப்பிடிப்புக்கு அனுமதி எதிரொலி: பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா முழுவதும் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த பிசி ஸ்ரீராம்: ஏன் தெரியுமா?

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே புகழ் பெற்றவர்கள் பட்டியலில் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் பிசி ஸ்ரீராம் ஆகிய இருவருக்கும் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரை போற்று படத்திற்கு அமேசான் கொடுத்த தொகை எவ்வளவு?

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம், திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் வேறு வழியின்றி ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியிடுவதாகவும்,

குறுகிய காலத்தில் பிரபலமாக சீரியல் நடிகை செய்த விபரீதம்: தற்கொலையில் முடிந்ததால் பரபரப்பு

குறுகிய காலத்தில் பிரபலமாக சீரியல் நடிகை ஒருவர் செய்த விபரீத முயற்சி, அவரை தற்கொலை வரை கொண்டு போய் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தேர்வில் தோல்வி அடைந்ததால் கொள்ளையர்களாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்: அதிர்ச்சி தகவல் 

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் வெறுத்து கொள்ளையர்களாக மாறிய இரண்டு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது