'மாரி' மூன்றாம் பாகம்? தனுஷின் திட்டம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் கமல், ரஜினி உள்பட முன்னணி நடிகர்கள் பலர் இரண்டாம் பாக படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷ் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'மாரி 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதனை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் மாரி கேரக்டர் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதால் அந்த கேரக்டரை அவ்வளவு சுலபமாக விட மனதில்லை என்றும், மீண்டும் மாரி கேரக்டரில் நடிக்க விரும்புவதாகவும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். எனவே இந்த படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்பு இருப்பதை அவர் இதன்மூலம் கோடிட்டு காட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் விரைவில் 'மாரி 3' படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை தனுஷ் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது
தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தாம்ஸ், ரோபோசங்கர், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்து வரும் 'மாரி 2' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
And that’s a wrap for #maari2 .. loved being maari once again. Can’t wait to be maari again. A character I enjoy and cherish playing. #tharalocal #senjuruven thank you @directormbalaji @omdop @Sai_Pallavi92 @Actor_Krishna @ttovino @thisisysr Robo and Vinod.
— Dhanush (@dhanushkraja) August 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments