அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாகும் தனுஷின் இரண்டு திரைப்படங்கள் 

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்த இரண்டு படங்களும் ஓடிடியில் தான் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான ’ தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’மாறன்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே தனுஷின் அடுத்த இரண்டு படங்களும் ஓடிடியில் ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடித்துவரும் ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த படங்களின் குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.